பெயர் தெரியாத
நீலமா பச்சையா,
தெரியாத ஒரு நிறத்தில்
அழகான குருவி.
மழை நின்ற குளிர்காலத்தில்
மீன்கள் வளரும்
தண்ணீர் தொட்டியின்
அருகில் வந்தமர்ந்து
சிலிர்த்து அழகு
காட்டியது.
சட்டென தொட்டி நீரில்
மூழ்கி எழுந்து
அமர்ந்தது
மீண்டுமொரு முறை!
என் பார்வையை உணர்ந்ததோ
என்னவோ?
ஒரு திரும்பலுடன்
பறந்து மறைந்தது.
அது மீன் பிடித்ததா
குளித்து எழுந்ததா
குளிர் அனுபவித்ததா
சட்டெனத் தோன்றியதைச்
செய்ததா?
தெரியவில்லை.
No comments:
Post a Comment