Thursday, October 7, 2021

யோகம்

 பூத்திருக்கும் மலர்

செடியின் சிரிப்பு.

வீசும் தென்றலில்

சிரிப்பு விரிகிறது.

புயலின் உக்கிரத்தில்

சிரிப்பும் உச்சமடைந்து அழிகிறது.

நானும் மலர்கிறேன்.

உடலின் ’செல்’கள் ஒவ்வொன்றும் மலர்கின்றன.

மலரின் தேனருந்த

பட்டாம்பூச்சிகள் சுற்றி வரலாம்.

அவற்றின் சிறகடிப்புகள்

தென்றலாகலாம்

புயலாகலாம்

ஒன்றும் ஆகாமலும் இருக்கலாம்!

No comments: