Wednesday, January 4, 2017

பிம்பம்

மலையோரச் சாலையில்
மோட்டார் சைக்கிளில் செல்கிறேன்.
பின்னோக்கிக் கண்ணாடியில் கண்ட
மலைக் காட்டின்
அழகிய பிம்பத்தில்
லயித்த கணம் நிலைதடுமாறிய வண்டியை
நிலைப்படுத்தினேன்.
காட்சியும் பிம்பமும்
இல்லாமல் ஆனது அக்கணத்தில்.

சற்றே தொலைவில் இருக்கும்
நண்பனின் இருப்பிடத்தில்
சற்று நேரத்தில் சென்று விடுவேன்.
சில பிம்பங்களை நானும்
மேலும் சில பிம்பங்களை அவனும்
பகிர்ந்து கொள்வோம்.
அதன் பின்

நானென் வழியில், அவன் தன் பாதையில்!

No comments: