அவர்
அவரைப் பற்றிய நினைவுகளை தொகுத்துக்கொள்ள வேண்டும். தன் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இந்த நேரம் அதற்கான ஒரு தூண்டுதலாக இருக்கட்டும்.
இவை அறுதியான உண்மைகளாக இருக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் அவரைக்குறித்த என் எண்ணங்களின் பதிவு என்றநிலையில் உண்மையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அவரிடமிருந்து நான் விலகியிருக்கும் தூரத்தை அறிய இது எனக்கொரு வாய்ப்பு! அந்த தூரமே, நான் தனிமனிதனா அல்லது இன்னொருவரின் அப்பட்டமான பிரதியா என உணர்த்தும். உண்மையில் முற்றாக விடுதலை அடைந்தவர்கள் தவிர மற்றவர்கள் முற்றிலும் தனிமனிதர்களாக இருக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில், முற்றிலும் ஒருபிரதியாக இருப்பதும் வாழ்க்கை நமக்கு அளிக்கும் வாய்ப்பை இழப்பதே.